Skip to main content

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புதிய அறிவிப்பு; குழப்பத்தில் ரஜினி ரசிகர்கள்

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

thalaivar169 update out now

 

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் ரஜினிகாந்த், நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இத்தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் உறுதி படுத்திருந்தார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தறிக்கவுள்ள நிலையில் நீண்ட நாளாக எந்த விதமான அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தது.

 

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஸ்டார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாளை காலை 11 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் இது எந்த படத்தின் அப்டேட் என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர். இதனிடையே சன் பிக்சர்ஸ் விரைவில் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்தை தயாரித்துள்ளது. ஒருவேளை அந்த படத்தின் அப்டேட்டாக இருக்குமோ என்றும் தனுஷ் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால் ரஜினி ரசிகர்கள் ஸ்டார் என்றால் என்றுமே ரஜினி தான் எனக் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தனுஷ் 50’ - அப்டேட் கொடுத்த படக்குழு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
dhanush 50 first look update

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது படப் பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதை தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இப்போது சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனுஷின் 50வது பட ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இதனை ஒரு போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதில் தனுஷ் மொட்டை கெட்டப்புடன் ரத்தம் ஒழுகிய நிலையில் பின் திரும்பி நிற்கிறார். இதேபோல் தான் இப்பட அறிவிப்பு வெளியான போஸ்டரிலும் இடம் பெற்றிருந்தார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் டைட்டிலோடு தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் வட சென்னையை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்பட்டது. 

Next Story

“மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை” - வைரலாகும் லால்சலாம் டிரைலர்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 LAL SALAAM - Trailer

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'லால் சலாம்'. இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.   

இப்படத்தின் டீஸர் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அதில் கிரிக்கெட் விளையாட்டில் இரு மதங்களை வைத்துச் செய்யும் அரசியல் குறித்துப் பேசப்பட்டிருப்பது போல கதை அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது” எனப் பேசியிருந்தார். இது சர்ச்சையான நிலையில், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள் என்பது அவருடைய பார்வை” என ரஜினி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ஆபத்தானவன், மதத்தையும் நம்பிக்கையையும் மனசுல வை, மனிதநேயத்தை அதுக்கு மேல வை போன்ற வசனங்கள் சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.