Skip to main content

அடுத்த கட்டத்திற்கு நகரும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

thalainagaram 2 shooting wrapped

 

கடந்த 2006ம் ஆண்டு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் வெளியான படம் தலைநகரம். இப்படத்தின்  மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சுந்தர் சி ரைட்டு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காமெடி ஆக்சன் கலந்து வெளியான இப்படத்தில் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்திருப்பார். இப்படம் பெற்ற வெற்றியின் காரணமாக தற்போது தலைநகரம் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கிறார். வி. இசட் துரை இயக்கி வருகிறார். 

 

சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தலைநகரம் 2 படத்தின் அனைத்து படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட பணியை முழுவீச்சில் முடித்து, தலைநகரம் 2 படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரண்மனை 4’ - ரிலீஸ் அப்டேட் சொன்ன குஷ்பு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sundar c aranmanai 4 release update

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த வருட தொடக்கத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. சுந்தர்.சி இயக்கி நடித்துள்ளார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அப்போது கடந்த பொங்கலன்று வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் படம் வெளியாகவில்லை, அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. 

இந்த நிலையில், அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அடுத்த மாதமான ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் புது போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன்...” - அனுபவம் பகிர்ந்த வடிவேலு 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vadivelu about maamanna in  ciff

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர்த்தொழில், ராவணக் கோட்டம், சாயவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், உடன்பால் மற்றும் விடுதலை பாகம் 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. மேடையில் பேசிய அவர், “அழுகிற சீனெல்லாம் இப்போது ஒர்க்கவுட்டாகாது. அப்படி இருந்தும் மாமன்னன் படத்தை நீங்க பார்த்து ரசிச்சிருக்கீங்க. அதை எப்படி ஏத்துக்கிட்டீங்கன்னு புரியல. அழுததுக்கு விருது கொடுத்திருக்கீங்க. அதுதான் என்னுடைய வாழ்க்கையும் கூட. அது படம் அல்ல என்னுடைய வாழ்வியல். இந்த வெற்றி, மாரி செல்வராஜுக்கு சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் மாதிரி. இந்த வயசில் அவருடைய அனுபவம், நம்ம பட்ட கஷ்டத்தையெல்லாம் சொல்றாரு. 

மாமன்னன் படத்தில் இருக்கிற எல்லா சீனையும் புரட்டி போட்டு பார்த்தா, எல்லாமே காமெடி சீனாத்தான் இருக்கும். இதை மாரி செல்வராஜே என்னிடம் சொன்னார். இப்போ இருக்கிற டைரக்டர் எல்லாம், நடிகர்கள் சத்தமா பேசுனா, நம்ம உடல் மொழியில் கத்தாம மெல்ல ஆக்ட் பண்ணு எனச் சொல்கின்றனர். எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நம்ம உடல் மொழிதான் ஓடிக்கிட்டு இருக்கு. நம்ம கலவை இல்லாத இடமே இல்லை என்கிறபோது ரொம்ப சந்தோசமா இருக்கு.  

ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன். வர கதையெல்லாம் சோக கதையா இருக்கு. ஒரே அழுகை. அதனால் ஒரு 5 வருஷம் கழிச்சு இது மாதிரி கதையை பார்ப்போம் என முடிவெடுத்துள்ளேன். மாமன்னன் படத்தில் டைரக்டர் அவருடைய வலியையும் சொல்லியிருந்தார். ஏழை மக்களின் வலியையும் சொல்லியிருந்தார். அந்த கதைக்கு விருது வாங்கினது ரொம்ப பெருமை” என்றார்.