Skip to main content

கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்; பரிதவித்த பிரபல நடிகை

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

telecom company staff locked actress anna rajan inside office

 

அங்கமாலி டைரிஸ், ராண்டு, ஐயப்பனும் கோஷியும் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அன்னா ராஜனை தனியார் அலுவலகத்திற்குள் வைத்து பூட்டிய சம்பவம் கேரள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

நடிகை அன்னா  ராஜன் தனது அம்மாவின் செல்போனுக்கு சிம் கார்டு வாங்குவதற்காக ஆலுவாவில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அலுவலகத்தின் மேலாளருக்கும், நடிகை அன்னா  ராஜனுக்கும் சிம் கார்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த, அலுவலக மேலாளர் நடிகை அன்னா ராஜனை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டியதாகவும் கூறப்படுகிறது. 

 

இதனையடுத்து அலுவா போலீசாரிடம் நடிகை அன்னா ராஜன் புகாரளித்தார். அதன்பேரில் ஷோரூம் மேலாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இறுதியில் ஷோரூம் மேலாளர் அன்னா ராஜனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதன் பிறகு இருவரையும் சுமுகமாக பேசி அனுப்பி வைத்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலையாளப் படங்கள் திடீர் நிறுத்தம் - தொடரும் சிக்கல்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
malayalam cinema pvr issue

மலையாளத் திரையுலகில் இந்த ஆண்டு தொடர்ந்து பல படங்கள் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. மஞ்சும்மல் பாய்ஸ் முதன் முதலில் ரூ.200 கோடி வசூலித்த படமாக இருக்கிறது. ஆடுஜீவிதம் குறுகிய நாட்களில் ரூ.100 கிளப்பில் இணைந்தது. மேலும் பிரேமலு, பிரம்மயுகம் எனத் தொடர் வெற்றிப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்தச் சூழலில் அண்மையில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளப் படங்களை, திடீரென அவர்களது திரையரங்குகளில் திரையிடுவதை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிறுத்தினர். இதற்கு காரணமாக திரையிடப்படும் விபிஎஃப் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தங்களது திரையரங்குகளில் க்யூப், யுஎஃப்ஓ, உள்ளிட்ட சில ஃபார்மெட்களில் படங்களைத் திரையிடுவதற்கு விபிஎஃப் என்ற கட்டணத்தை தயாரிப்பாளர்களிடத்தில் வசூலித்து வந்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மாற்றாக ‘பிடிசி’ எனப்படும் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் படங்களை திரையிட வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் இந்த முடிவை எதிர்த்துதான் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிர்வாகம் மலையாளத் திரைப்படங்களை நிறுத்தியுள்ளார்கள்.  இதனால் இந்த விவகாரம் தற்போது மலையாளத் திரையுலகில் பெரிதாக பேசப்படுகிறது. திரைப்படங்கள் திரையிடப்படாததால் வசூலைப் பாதிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அதனால் இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேசி, பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம், ஜெய் கணேஷ் ஆகிய மலையாளப் படங்கள் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

திரைப்படமாகும் உண்மை சம்பவம் - நடிகைக்கு கொலை மிரட்டல்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
raime sen maakaali poster issue

இந்தி மற்றும் பெங்காலி படங்களில் கவனம் செலுத்தி வருபவர் ரைமா சென். இப்போது இந்தியில் மாகாளி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படம் 16 ஆகஸ்ட் 1946 அன்று கல்கத்தாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது குறிப்பிடத்தக்கது. விஜய் யேலகண்டி இயக்கும் இப்படத்தை விஷ்வ பிரசாத் தயாரிக்க அனுராக் ஹல்டர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கின் போஸ்டர் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் இந்து மதத்தை குறிக்கும் வகையில் காளி தோற்றத்தில் ஒரு புறமும் முஸ்லீம் மதத்தை குறிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்த தோற்றத்தில் ஒரு புறமும் இணைந்து இருக்கும் முகம் கொண்ட புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டரை தொடர்ந்து தொலைப்பேசி வாயிலாக தனக்கு மிரட்டல் வருவதாக ரைமா சென் தெரிவித்துள்ளார். 

raime sen maakaali poster issue

இது தொடர்பாக அவர் கூறுகையில், “மர்ம நபர்களால் பெங்காலி மற்றும் இந்தியில் அலைபேசி கால்கள் வருகிறது. சுசித்ரா சென்னின் பேத்தியாக இருந்த நான் எப்படி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்பதைப் பொறுத்து மிரட்டல்கள் வந்தன. எதிர்காலத்தில் கொல்கத்தாவில் தான் நீ இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்துக்கொள் என்கிறார்கள். முதலில் படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தைச் சொல்லுங்கள் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.