Skip to main content

'தமிழ் ராக்கர்ஸ்' ; புதிய அறிவிப்பை வெளியிட்ட அருண் விஜய்

Published on 04/07/2022 | Edited on 04/07/2022


 

 'Tamil Rockers'; Arun Vijay made a new announcement

தமிழ் திரையுலகில் படங்களை தாண்டி தற்போது வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 'ஏவிஎம் புரடக்சன்ஸ்' தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ் 'தமிழ் ராக்கர்ஸ்'. அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடரை அறிவழகன் இயக்கியுள்ளார். மேலும் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடருக்கு விகாஸ் படிசா என்பவர் இசையமைக்கிறார். 


 
'தமிழ் ராக்கர்ஸ்' தொடரின் டீசர் நேற்று (03.07.2022) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது புது அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த தொடரின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என அருண் விஜய், வாணி போஜன் ஆகியோர் ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். இந்த தொடர் தமிழ்நாடு காவல் துறை அதிகாரி 'ருத்ரா'-வின் வாழ்க்கையை பற்றி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   


 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் டூ ஒலி - மீண்டும் வித்தியாசம் காட்டும் வெற்றிக் கூட்டணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Aadhi and Arivazhagan Sabdham movie teaser released

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி இருவரும் ஈரம் பட வெற்றிக்கு பிறகு இணைந்துள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வசனங்கள் ஏதும் இடம் பெறாத இந்த டீசரில் திகில் படங்களுக்கு உண்டான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து படத்தில் வித்தியாசம் காட்டியது போல் இப்படத்தில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் படக்குழு. 

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ஈரம் படம் இதே ஜானரில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது. இதையடுத்து மீண்டும் ஒரு திகில் படத்திற்காக வித்தியாசமான கதைக்களத்தின் பிண்ணனியில் இணைந்துள்ள இக்கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் அருண் விஜய் கூட்டணி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
arun vijay next movie update

அருண் விஜய் கடைசியாக ஏ.எல் விஜய் இயக்கத்தில் ‘மிஷன் சாப்டர் 1’ படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது. 

இந்த நிலையில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அருண் விஜய்யின் 36ஆவது படமாக உருவாகும் இப்படத்தை கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, உதயநிதியின் கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க பாபி பாலசந்தர் வழங்குகிறார். 

இப்பட பூஜையில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கிளாப் போர்டு அடித்து படப் பணிகளை தொடங்கி வைத்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படப் பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.