![suseenthiran about maargazhi thingal](http://image.nakkheeran.in/cdn/farfuture/-rUtLyYtcidAA-XEaC5cG3ylnj5NahcVW1OY2FxOSFM/1685534038/sites/default/files/inline-images/33_75.jpg)
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா ஹீரோவாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்துள்ள நிலையில் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் தயாரிக்க பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இசை பணிகளை ஜி.வி.பிரகாஷ் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி பழனி அருகே கணக்கப்பட்டி பகுதியில் நடைபெற்று வந்துள்ளது. அப்போது இடி விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக 5 லைட் மேன்கள் உயிர்தப்பியதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "கணக்கப்பட்டி கிராமத்து அருகே ஒரு காட்டு கோயிலில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். இப்படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து பிரம்மாண்ட குடை லைட்கள் வரவழைத்தோம்.
படப்பிடிப்பின் போது திடீரென பயங்க இடியும் மின்னலுடன் கூடிய புயல் காற்று வீசியது. எல்லாருமே ஸ்தம்பித்து போய்விட்டோம். அப்போது குடை லைட்கள் எல்லாமே கீழே விழுந்துவிட்டது. அதிலும் ஒரு லைட் மீது இடியே விழுந்துவிட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக கடவுளின் அருளால் 5 லைட் மேன்கள் உயிர்தப்பினர்" என்று பேசியுள்ளார்.