Skip to main content

"முற்றிலும் வித்தியாசமான முயற்சி" - சூர்யா வாழ்த்து

 

suriya wishes karthi japan teaser

 

கார்த்தி தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். ராஜுமுருகன் இயக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

 

இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திர வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்க்கையில் கார்த்தியின் கதாபாத்திரம் ஹீரோவாகவும், காமெடியனாகவும், வில்லனாகவும் அமைக்கப்பட்டுள்ளதாகக் காட்டப்படுகிறது.  

 

இந்நிலையில் சூர்யா, கார்த்தியின் வீடியோவை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜப்பான் மேட் இன் இந்தியா டீசர் நன்றாக உள்ளது. முற்றிலும் வித்தியாசமான முயற்சி தம்பி" எனக் குறிப்பிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.