/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/113_19.jpg)
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், “மதுரை மக்களின் அச்சு அசல் அன்பு எங்களுக்கு கிடைப்பது பெரிய வரம். கிராமத்தில் இருந்து வந்த ஒருத்தர் இயக்குநர் இமயம் ஆகமுடியும் என்பதற்கு பெரிய எடுத்துக்காட்டு பாரதிராஜா சார். அவருக்குப் பிறகு கிராமத்தில் இருந்து வந்த ஒவ்வொருத்தருக்குமே அவர் நம்பிக்கையாக இருந்திருக்கிறார். இந்த விழாவிற்கு நேரம் ஒதுக்கி அவர் வந்ததை பெரிய விஷயமாகப் பார்க்கிறேன். அவர் ஆலமரம் மாதிரி. அவருடைய வெளிச்சத்தில் தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம்.
அவருடைய படம் சமூகத்தை நோக்கி பல கேள்விகள் கேட்டுள்ளது. பேருக்கு பின்னாடி இருக்குறது என்ன பட்டமா என்ற கேள்வி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்திலும் கடைசியில் வரும் வசனங்கள் பவர்ஃபுல்லாக இருக்கும். அந்த வசனங்களுக்காகத்தான் இந்தப் படத்தை தயாரித்தேன். விருமன் படம் மிகப்பெரிய வெற்றிபெறும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)