Skip to main content

‘சிம்புதான் காரணம்’- மாநாடு சர்ச்சை குறித்து தயாரிப்பாளர்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் மாநாடு படம் இப்போது ஆரம்பிக்கும், அப்போது ஆரம்பிக்கும் என அவ்வப்போது தகவல்கள் வெளியான நிலையில் மாநாடு படத்தை கைவிட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்....
 

simbu

 

 

''வணக்கம்... நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி... துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை. 
 

அதனால் சிம்பு "நடிக்க இருந்த" மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்திய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. பத்திரிகையாளர்கள் அவ்வளவு துணை நின்றார்கள். எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும். அனைவருக்கும் நன்றியும் அன்பும்!!'' என அறிக்கை வெளியிட்டுள்ளார். சுரேஷ் காமாட்சியின் இந்த திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அளித்த ஒரு பேட்டியில், “சிம்புவேதான் இந்த படத்திலிருந்து விலகி கொள்வதாக என்னிடம் தெரிவித்தார். என்னை அறிவிக்கவும் சொல்லிவிட்டார். எனவே இந்த முடிவை எடுக்க அவர்தான் காரணம். இந்த படத்திற்காக ஒரு வருடமாக காத்திருக்கும் பலருக்காக சிம்புவை நீக்கி, வேறொரு ஹீரோவை வைத்து மாநாடு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன்”என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்