super singer junior season 9 update

Advertisment

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சீனியர், ஜூனியர்என இரு பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது.தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 வது சீசன் நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளக் கூடிய போட்டியாளர்களின் பெயர்கள் இந்த வாரம் சின்ன சர்ப்ரைஸுடன் அறிவிக்கப்பட்டது.

இறுதிக்கட்டத்தை எட்டும் பாடகர்களுக்கு திரையில் வாய்ப்புகளை தருவதாக, இசையமைப்பாளர் தமன் வாக்குறுதி தந்திருந்த நிலையில், இறுதிக்கட்டப் போட்டியாளர்கள் விரைவில் நயன்தாரா நடிப்பில் வெளிவரவிருக்கும் அன்னபூரணி படத்தில் ஒரு அழகான பாடலைப் பாடியுள்ளனர். முன்னதாக இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து அன்னபூரணி படப்பாடலைப் பாடியுள்ளனர்.

மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர்வெடி கோகுல் என பாடகர்களை உற்சாகப்படுத்திய தமன், நிகழ்ச்சியின் நடுவர் ஆண்டனி தாசனுக்கும் ஒரு பாடல் வாய்ப்பு தந்து அசத்தியுள்ளார். மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திறமையாளர்கள் அனைவருக்கும் திரைப்பட பாடல் வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இசையமைப்பாளர் தமனின் நெகிழ்ச்சியான செயல்கள் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.