super singer junior 9 update

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விஜய் டிவியில், பல வருடங்களாக நடந்து வரும் நிலையில், தமிழ் இசை உலகில் இந்நிகழ்ச்சி மூலம் பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக வலம் வருகின்றனர். இந்நிகழ்ச்சி சீனியர்,ஜூனியர்என பிரிவுகளாக இளைஞர்களுக்கும், சிறு வயதினருக்குமாக நடைபெறுகிறது. தற்போது சிறுவர்களுக்கான ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் நடந்து வருகிறது.

Advertisment

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல எளிமையானவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பல அற்புதமான நிகழ்வுகள் நடந்து வருகின்றது. கடந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா, மிமிக்ரி குரலில் பாடல்கள் பாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஹர்ஷினி நேத்ரா எளிமையான குடும்பத்தைச்சேர்ந்த சிறுமி ஆவார். விழுப்புரம் நகரை சேர்ந்த இவரின் தந்தை ஒரு சிறு கடை நடத்தி வருகிறார். தன் மகளின் பாடகி ஆசையை நிறைவேற்ற அந்த குடும்பமே உழைத்து வருகிறது.

Advertisment

ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார் ஹர்ஷினி நேத்ரா. கடந்த வார நிகழ்ச்சியில் ‘ராசாத்தி’ பாடல் பாடி அசத்திய அவர் அடுத்ததாக செய்த மிமிக்ரி தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. பிரபல பாடகி வைக்கம் விஜயலக்‌ஷ்மி மற்றும் பாடகி தீ ஆகியோரின் குரலில் அவர்கள் பாடிய பாடலை அவர்களை போலவே பாடி அசத்தி, அனைவரையும் கவர்ந்துள்ளார். நடுவர்கள் அனைவரும் அவரின் திறமையை பார்த்து, அவரை வெகுவாக பாராட்டினர். அவர் மிமிக்ரியில் பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.