sruthihassan thanked lokesh kanagaraj

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்த படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

Advertisment

நடிப்பதற்கு முன்பு பாடகராக பல பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் இசையமைப்பாளராக கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் பணியாற்றியிருந்தார். இதனிடையே 'எட்ஜ்', 'ஷீ இஸ் எ ஹீரோ' எனும் 2 சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் புதிய இசை ஆல்பம்ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். 'மான்ஸ்டர் மெஷின்' (Monster Machine) என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடலை ஸ்ருதிஹாசனே இசையமைத்து வரிகள் எழுதி, பாடியும் உள்ளார். இந்த பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ஸ்ருதிஹாசன் மற்றும் அந்த பாடல்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள ஸ்ருதிஹாசன், "நீங்கள் எப்போதும் சிறந்தவர்" என்று அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.