Skip to main content

"இரண்டு புகைப்படங்கள் என்னை கலங்கடித்துவிட்டன" - முதல்வர் குறித்து பூரித்து பேசிய சூரி

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

soori about cm stalin

 

முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் விதமாக சென்னையில் அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இந்த புகைப்படக் கண்காட்சி கடந்த 19 ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கண்காட்சியை திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். வரும் 27ஆம் தேதியுடன் இந்த கண்காட்சி நிறைவடைகிறது.   

 

இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் நடிகர் சூரி இந்தக் கண்காட்சியை பார்வையிட்டனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சூரி, "முதல்வரின் அரசியல் பயணத்தில், அவர் கடந்து வந்த பாதைகள் மற்றும் அவர் படைத்த சாதனைகள் என அனைத்தையும் இந்த கண்காட்சியில் பதிவு செய்துள்ளார்கள். நாமெல்லாம் நமது 14, 15 வயதில் கபடி, கோலி என விளையாடிட்டு இருந்தோம். ஆனால், ஸ்டாலின் என்ற மாணவர் அவரது 14 வயதில் கட்சிக்கு பிரச்சாரம் செய்து 15 வயதில் இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கி 20 வயதில் பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து, அதன் பிறகு எதிர்பாராத இன்னல்களைச் சந்தித்து இந்தி எதிர்ப்பில், மிசாவில் ஜெயிலில் அடைத்து அங்கு பல கஷ்டங்களைச் சந்தித்துள்ளார். இவை அனைத்தும் புகைப்படக் கண்காட்சியில் வைத்திருக்கும் புகைப்படங்களைப் பார்க்கும் போது தெரிந்துகொள்ள முடிகிறது.

 

அது மட்டுமில்லாமல், சினிமா துறையிலும் காலடி வைத்து ஒரு தயாரிப்பாளராக, ஒரு நடிகராக ஒரு வார இதழின் ஆசிரியராக அதிலும் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார். பின்பு 36 வயதில் எம்.எல்.ஏ ஆகி, 43 வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற அந்தஸ்தைப் பெற்றார். அந்தப் பெரிய பதவியை மக்கள் அவருக்கு வழங்கினர். சிங்கார சென்னை என்ற திட்டத்தை உருவாக்கி பல பூங்காக்கள், மேம்பாலங்கள், தூய்மை பணியாளர்களுக்கு வசதியாக நவீன வசதியை உருவாக்கியுள்ளார். இது போன்று பல விஷயங்களை முன்னெடுத்து முன்னாள் முதல்வர் கலைஞர் ஆசியுடன் எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து பணி செய்து வந்தார். அந்த உழைப்புக்காகத்தான் இன்று மக்கள் அவரை முதலமைச்சராக்கி உள்ளனர். 

 

ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கையில், ஒரு புகைப்படம் சிரிக்க வைக்கிறது; ஒரு புகைப்படம் சிந்திக்க வைக்கிறது; இன்னொரு புகைப்படம் அழ வைக்கிறது; மற்றொரு புகைப்படம் பிரமிக்க வைக்கிறது. அதன் பின்னால் பெரிய வரலாறு இருக்கிறது. கலைஞரின் மகன் என்பதால் உடனடியாக சீட் கொடுத்து அவருக்கு முதல்வர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. கடைக்கோடித் தொண்டன் எப்படி கீழிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் பணி செய்து மேலே வருகிறானோ, அது போல அவரது 14 வயதில் இருந்து அயராது உழைத்து இன்றைக்கு முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். தகுதியான இடத்திற்கு தகுதியான மனிதராக அவர் இருக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியலையே தெரிந்துகொள்ளலாம்.

 

இந்தக் கண்காட்சியில் இரண்டு புகைப்படங்கள் என்னைக் கலங்கடித்துவிட்டன. ஒன்று, கலைஞர் இறுதி மூச்சில் அவரிடம், தலைவரே உங்களை அப்பா என்று முதல் முறையாக அழைக்கட்டுமா என்று முதல்வர் கேட்பது. இரண்டாவது கலைஞர் இறந்த பிறகு கடற்கரையில் இடம் கேட்பது தொடர்பாகத் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பு வந்தபோது முதல்வர் நிலைகுலைந்து நிற்கும் காட்சி. கலைஞர் எழுதியது நிறைய படங்களாக உருவாகியுள்ளன. அதுபோல் இவரது வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கும் முயற்சி பின்னாளில் எடுக்கப்படும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நடப்பவை எல்லாம் நன்மைக்கே” - சூரி 

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
soori vishnu vishal land issue solved

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூரி, விஷ்ணு விஷாலின் தந்தையான முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடவாலா, மீது நில மோசடி புகார் கொடுத்திருந்தார். அதாவது சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். 

இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்குப் பதிவு செய்தனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தி வந்தனர். 

soori vishnu vishal land issue solved

இந்தச் சூழலில் சூரி, விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில். பாசிட்டிவிட்டியுடன் செல்வோம் சூரி அண்ணா” என குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷாலின் புகைப்படத்தைத் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த சூரி, “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என குறிப்பிட்டு விஷ்ணு விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.