Skip to main content

10 கோடி மதிப்புள்ள சொத்தை அடமானம் வைத்த சோனு சூட்... குவியும் பாராட்டுகள்!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

sonu sood

 

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட், கரோனா நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, வெளிநாடுகளில் சிக்கித் தவித்தவர்கள் இந்தியா திரும்ப உதவுதல், விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது, ஒரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கியது உட்பட பல்வேறு உதவிகள் செய்து வந்தார். இது பலரது பாராட்டையும் பெற்றது. இதனையடுத்து, கரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்த பின்னும் சமூக வலைதளம் வாயிலாக தன்னிடம் உதவி கோருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

 

இந்த நிலையில், அவர் தன்னுடைய 10 கோடி மதிப்பிலான சொத்துக்களைத் தனியார் வங்கி ஒன்றில் அடமானம் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், மும்பை பகுதியில் அமைந்துள்ள அவருக்குச் சொந்தமான 2 கடைகள் மற்றும் 6 வீடுகள் அடக்கம். அடமானம் மூலம் கிடைத்த பணத்தை அவர் சமூக பணிகளுக்காக செலவிட உள்ளதாக சோனு சூட்டின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக சோனு சூட்டிடம் இருந்து ஏதேனும் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் சோனு சூட்டிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'டென்ஷன் ஆகாதீர்கள்;பிரார்த்தனை செய்யுங்கள்''-சோனு சூட் ட்வீட்!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

'Don't be tense; pray' '- Sonu Suite Tweet!

 

நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்த குழந்தையின் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலான நிலையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய நடிகர் சோனு சூட் முன்வந்துள்ளார்.

 

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பம் ஒன்றில் இரண்டரை வயது சிறுமி ஒருவர் பிறக்கும் பொழுதே நான்கு கைகள் நான்கு கால்களுடன் பிறந்துள்ளார்.அறுவை சிகிச்சை மூலமே அவற்றை அகற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வறுமை காரணத்தால் அறுவை சிகிச்சை செய்வதற்கான பணம் இல்லாமல் சிறுமியின் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இந்நிலையில் அச்சிறுமியின் வீடியோவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து உதவி செய்ய முன்வந்துள்ளார். சிறுமியுடைய வயிற்றில் கூடுதலாக உள்ள கைகள் மற்றும் கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றத் தேவையான பரிசோதனையை மருத்துவர்கள் செய்யும் புகைப்படத்தையும், வீடியோவையும் ட்வீட் செய்துள்ள சோனு ''டென்ஷன் ஆகாதீர்கள் சிகிச்சை தொடங்கிவிட்டது. பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கரோனா நேரங்களில் பல்வேறு உதவிகளை செய்ததன் மூலம் மேலும் பிரபலமானவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

வெளியான தகவல்... சோகத்தில் சோனுசூட் ரசிகர்கள்...!

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

Released information ... Sonu Sood fans in grief ...!

 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் பல கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

நண்பகல் 12 மணி நிலவரப்படி உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலையில் வகித்து வந்த நிலையில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 272 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி- 121 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி-03 இடங்களிலும், காங்கிரஸ்-03 இடங்களிலும், மற்றவை 03 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாப் சட்டமன்றத்தில் உள்ள 117 இடங்களில் ஆம் ஆத்மி 89 இடங்களிலும், காங்கிரஸ் 18 இடங்களிலும், அகாலிதளம் 06 இடங்களிலும் பாஜக 03 இடங்களிலும், மற்றவை 01 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

 

கரோனா ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு வகையில் உதவி செய்து பிரபலமான நடிகர் சோனு சூட், பஞ்சாப் தேர்தலில் தனது தங்கையைக் களமிறக்கியிருந்தார். தனது தங்கை மாளவிகாவின் விருப்பத்தை தொடர்ந்து பஞ்சாப்பின் மேகா தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்நிலையில் மாளவிகா வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ''எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் எப்போதும் பொழியும் அன்பையும் மரியாதையையும் அவர்களுக்கு திருப்பி அளிக்க விரும்புகிறார் எனது தங்கை" என சோனுசூட் நம்பிக்கையுடன் கூறியிருந்த நிலையில் அவரின் பின்னடைவு தொடர்பாக வெளியான தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.