/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/181_27.jpg)
பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் சோனு சூட். தமிழில் மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட சில படங்களில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகராக மட்டும் அல்லாது தனது அறக்கட்டளையின் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளையும் நற்பணிகளையும் செய்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பல்வேறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக வாகன வசதி ஏற்படுத்தித் தந்தார். இதன் மூலம் பலரது கவனம் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றார்.
இவர் நேற்று (30.07.2024) தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அவரது ரசிகர் செய்த ஏற்பாடு தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தம் என்ற நபர் ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/182_23.jpg)
இவர் அப்பள்ளியில் படிக்கும் 1200 மாண மாணவிகளை வைத்து பள்ளி விளையாட்டு மைதானத்தில் சோனு சூட் முகத்தை பிரதிபலிக்கும் வகையில் அவரின் முக உருவத்தில் அமரவைத்துள்ளார். மேலும் HBD REAL HERO எனவும் மாணவர்களை அமர வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படமும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)