Skip to main content

ஃபகத் ஃபாசில் படத்தில் இணையும் எஸ் ஜே.சூர்யா - எகிறும் எதிர்பார்ப்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
sj surya fahad fazil movie tpdate

எஸ்.ஜே. சூர்யா தற்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் விக்ரமின் 62வது படத்தையும், தனுஷின் ராயன் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதில் ராயன் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துவிட்டது. விக்ரமின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழைத் தாண்டி தெலுங்கிலும் நானி நடிக்கும் ‘சரிபோதா சனிவாரம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த எஸ்.ஜே சூர்யா, தற்போது மலையாளத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் விபின் தாஸ் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபகத் ஃபாசில் தற்போது தமிழில் ரஜினியின் வேட்டையன், வடிவேலுவுடன் மாரீசன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2, உள்ளிட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். மேலும் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆவேஷம் படம் வருகிற 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த சூழலில் ஃபகத் ஃபாசிலுடன் எஸ்.ஜே.சூர்யா இணையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீண்டநாள் ஆசை நிறைவேறியது” - சேரன் மகிழ்ச்சி

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
cheran debut in mollywood as actor

இயக்குநர் மற்றும் நடிகரான சேரன், கடைசியாக ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். இதையடுத்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். சத்ய ஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியானது. மேலும் ராமதாஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்தத் தகவல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சேரன், தான் சரத்குமாரை வைத்து மற்றொரு படம் இயக்கவுள்ளதாகவும் இந்தப் படம் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு இல்லை எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் இயக்கவுள்ள கிச்சா சுதீப் படம் கைவிடப்பட்டதாகவும், பிரபு தேவா மற்றும் கஜோல் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் வதந்தி உலா வந்தது. இதனை மறுத்த சேரன், “தவறான செய்தி. கிச்சா சுதீப்பின் 47வது படத்தில் பணியாற்றி வருகிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

இந்த நிலையில் தான் நடிகராக நடிக்கும் புதுப் படம் குறித்த அப்டேட்டை தற்போது பகிர்ந்துள்ளார் சேரன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது.. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோதாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன்.. என்றும் போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் சினிமா கம்பெனி தயாரிக்கும் இப்படம் ‘நரிவெட்டா’ என்ற தலைப்பில் உருவாகிறது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story

“இந்தப் படத்துக்கும் ஆதரிச்சு அன்பு காட்டுங்க” - எஸ்.ஜே சூர்யா

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
sj surya request to watch his telugy movie

தமிழி சினிமாவில் தற்போது பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் கைவசம் தனுஷின் ராயன், விக்ரமின் வீர தீர சூரன், விக்னேஷ் சிவனின் எல்.ஐ.சி., கார்த்தியின் சர்தார் 2, தெலுங்கில் நானியுடன் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். இன்று எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அவர் நடித்து வரும் படக்குழுவினர் எனப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தெலுங்கில் நானியுடன் அவர் நடித்து வரும் படத்தின் சார்பாக அவருக்கு பிறந்தநாள் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை என்ற தலைப்பில் ஆகஸ்ட் 29இல் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எஸ்.ஜே சூர்யா தனது எக்ஸ் பக்கம் மூலமாக நன்றி கூறியுள்ளார். மேலும் ஒரு பதிவில், சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் டீசரை பகிர்ந்து, “என் அன்பும் ஆருயுருமான நண்பர்களே ராயன் படத்திற்கு பிறகு, தெலுங்கில் நானியுடன் சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் வில்லனாக நடித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தையும் ஆதரிச்சு அன்பு காட்டுங்க எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இப்படத்தை  டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்க விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். கதாநாயகியாக ப்ரியங்கா மோகனா நடிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.