
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிலையில், ‘டான்’ படத்தின் டப்பிங் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்த டப்பிங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு தனது போர்ஷனுக்கான டப்பிங்கை ஆரம்பித்தார்.