Skip to main content

"லட்சக்கணக்கானவர்களை ஊக்கப்படுத்திய மனிதர்" - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

 

vgeds


2019ஆம் ஆண்டுக்கான 'தாதாசாகேப் பால்கே' விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை, கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2019ஆம் ஆண்டிற்கான 'தாதாசாகேப் பால்கே விருது' இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என அவரது பங்களிப்பு சிறப்பானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

 

ஏற்கனவே சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலச்சந்தர், அமிதாப் பச்சன், வினோத் கண்ணா, லதா மங்கேஸ்வர், கன்னட நடிகர் ராஜ்குமார், அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு 'தாதாசாகேப் பால்கே விருது' வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை நடிகர் ரஜினிகாந்த் பெற்றிருக்கும் நிலையில், அவருக்குப் பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

gvdeasgad

 

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரஜினிக்கு வாழ்த்து சொல்லி ட்வீட் செய்துள்ளார். அதில்... "லட்சக்கணக்கானவர்களை ஊக்கப்படுத்திய மனிதருக்கு... வாழ்க்கையின் அனைத்து தடைகளையும் தாண்டி மேல வர என்னைத் தூண்டிய மனிதருக்கு... இந்த மரியாதைக்குரிய தாதாசாகேப் பால்கே விருதுக்கு தகுதியான மனிதருக்கு... உங்களை நேசிக்கிறேன், நீங்கள் செய்த அனைத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன் தலைவா" என பதிவிட்டுள்ளார்.