/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/463_13.jpg)
சூரரைப் போற்று வெற்றிக்குப் பிறகு சூர்யாவும் சுதா கொங்கராவும் மீண்டும் ஒரு படத்திற்கு கைகோர்த்தனர். இப்படம் சூர்யாவின் 43வது படமாக உருவாகும் எனத்தெரிவித்த படக்குழு, கடந்த ஆண்டு அக்டோபரில் படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டது. அதில் படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு 'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றது. மேலும் ஒரு போராட்டக் களத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடப்பதாகவும் அங்கு அடிதடி, பாட்டில் உள்ளிட்டவை வீசப்பட்டு அந்த இடமே ஒரு போர்க்களமாக காட்சியளிப்பது போல் அந்த வீடியோ அமைந்ததிருந்தது.
2டி நிறுவனம் தயாரிக்கவிருந்த இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்க கமிட்டாகியிருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக இப்படம் அமைந்தது. இப்படத்திற்கான பாடல் ஒன்றை பாடகி தீ குரலில் பதிவு செய்துள்ளதாக அப்டேட் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இப்படத்தில் சூர்யா தற்போது விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு 2டி நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகுவதாகவும், அதற்கு பதிலாக புதிய தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனை தற்போது ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)