Skip to main content

ராட்சசன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

Sivakarthikeyan

 

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ராட்சசன். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷை வைத்து படம் இயக்க ஒப்பந்தமானார் இயக்குநர் ராம்குமார். அப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. ராட்சசன் வெளியாகி மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இப்படம் தொடர்பாக எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றுவரை வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், இயக்குநர் ராம்குமாரின் அடுத்த படம் குறித்து புதிய தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,  ராம்குமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. தனுஷ் நடிக்க இருந்த கதையில்தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளாரா அல்லது சிவகார்த்திகேயனுக்காக புதிய கதையை ராம்குமார் தயார் செய்துள்ளாரா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயனும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருவதால், ராம்குமார் - சிவகார்த்திகேயன் கூட்டணி படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போதுதான் இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை உறுதிசெய்ய முடியும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் பட அப்டேட்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sivakarthikeyan produvtion movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் பள்ளியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.