/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_216.jpg)
விஜய் சேதுபதியின் 50வது படமாக கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘மகாராஜா’. நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்த இப்படத்தில் அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்த இப்படம் வணிக ரீதியாக ரூ.100 கோடி வசூல் செய்தாக படக்குழு அறிவித்திருந்தனர்.
விமர்சன ரீதியாகத் திரையரங்கில் 100 நாட்களைக் கடந்து ஓடிய இப்படம் நெட் ஃபிலிக்ஸ் ஓ.டி.டி. தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தனர். மேலும் இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியால் நித்திலன் சாமிநாதனுக்கு பிஎம்டபள்யூ காரை படத் தயாரிப்பு நிறுவனம் பரிசாக வழக்கியது. இதையடுத்து மகாராஜா படத்தின் இந்தி ரீமேக்கில் அமிர் கான் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. கடந்த மாதம் இப்படம் சீன மொழியில் வெளியாகும் என நித்திலன் சாமிநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மகாராஜா திரைப்படம் தற்போது சீன மொழியில் வெளியாகியிருக்கும் நிலையில், படம் வெற்றி பெற வேண்டுமென சிவகார்த்திகேயன் தற்போது வாழ்த்தியுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், “மகாராஜா படம் சீனாவில் பிரமாண்டமாக வெளியாகிறது! இந்த சாதனையைப் பற்றிப் பெருமைப்படுவதோடு, அங்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். எல்லைகளைக் கடந்து செல்லும் இப்படியொரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)