'மாவீரன்' படத்தைத் தொடர்ந்து, கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதை முடித்துவிட்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இது சிவகார்த்திகேயனின் 23வது படமாக உருவாகிறது.
இந்த நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் இரண்டு வருடங்களுக்கு மேலாக உருவாகி வருகிறது. இதில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி. ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது. டீசர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்தார். முன்னதாகவே இது பற்றிய தகவல் வந்திருந்தாலும் தற்போது சிவகார்த்திகேயன் அதை உறுதி செய்துள்ளார்.