sivakarthikeyan amaran movie release update

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகர்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Advertisment

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தாண்டு தீபாவளியான அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினம் என்பதால் வரவேற்பு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisment