Skip to main content

“இதற்காக தான் இவ்ளோ வருஷம் போராடினோம்” - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
sivakarthikeyan about ayalaan response

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகப் பணிகள் நடந்து தற்போது ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி. ராஜா தயாரிப்பில் தொடங்கப்பட்ட இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வாங்கியது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று (12.01.2024) வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், “ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் வலி நிறைந்த கதை இருக்கும். ஒவ்வொரு வேதனையான கதைக்கும் வெற்றிகரமான முடிவு உண்டு. வலியை ஏற்றுக்கொண்டு வெற்றி பெற தயாராகுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

ad

நிறைய சிக்கல்களை தாண்டி வெளியாகியுள்ள இப்படத்தை, சிவகார்த்தியேன் ரசிகர்களுடன் பார்க்க, இன்று காலை சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார். படம் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சைன்ஸ் ஃபிக்சன் ஃபேண்டஸி ஜானரில் இப்படம் வெளியாகியிருக்கிறது. நம்ம ஊர்ல இது மாதிரி ஜானர் ரொம்ப ரொம்ப குறைவு. அதை முயற்சி பண்ணியிருக்கோம் என்பதே எனக்கு சந்தோஷம். தியேட்டருக்கு போங்க. என்ஜாய் பன்னுங்க. நம்பி வாங்க. சந்தோஷமா போங்க. ரிபீட்ல வாங்க. அயலான், எனக்கு ரஜினி முருகன் படத்துக்கு பிறகு பொங்கலுக்கு இரண்டாவது ரிலீஸ். இதுவும் நல்ல வரவேற்பை பெறும் என நம்புகிறேன்” என்றார்.

பின்பு படம் முடிந்து வெளியே வந்த அவர், “இதற்காக தான் நாங்க இவ்ளோ வருஷம் போராடினோம். இன்னைக்கு அது கிடைச்சிருக்கு. அதைத் தாண்டி இன்று நேற்று நாளை படத்திற்கு பிறகு ரவிகுமார் பெயரை ஸ்கிரீனில் பார்த்தது தான் எனக்கு பெரிய சந்தோஷம். நானும் ஏலியன் வருகிற காட்சியெல்லாம் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அதுக்குதான் ஆசைப்பட்டோம் அது நடந்திருக்கு” என நெகிழ்ச்சியுடன் செய்தியாளர்களிடம் பேசினார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் பட அப்டேட்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
sivakarthikeyan produvtion movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்து ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் பள்ளியில் நடக்கும் கதைக்களத்தைக் கொண்டு படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.