Skip to main content

“நீங்க இன்னும் மாறவே இல்லை” - மாதவன் குறித்து சிம்ரன் பதிவு

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

simran tweet about madhavan

 

இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தில் மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன் மாதவன் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “பார்த்தாலே பரவசம்’ படத்தின் சிமி கேரக்டர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ இந்திரா கேரக்டரை அடுத்து ’ராக்கெட்ரி’ படத்தின் மிஸஸ் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்ததுவரை உங்களிடம் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் உங்களுடன் நடித்தது அருமையாக இருந்தது. நீங்கள் சிறந்தவர் மேடி” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது அன்பு நண்பர் எம். காமராஜன் இனி இல்லை” - கலங்கிய சிம்ரன்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
simran friend passed away

சிம்ரன் தற்போது துருவ நட்சத்திரம், சப்தம் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். சப்தம் படம் அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பர் இறந்துவிட்டதாகத் தெரிவித்து வருத்தமடைந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம்ப முடியாத மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி. எனது அன்பு நண்பர் எம். காமராஜன் இனி இல்லை. 25 வருடங்களாக எனது வலது கரமாகவும், எனது ஆதரவு தூணாகவும் இருந்தார். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ஒருவர். உறுதியான மற்றும் சுயமாக உருவாக்கப்பட்ட மனிதன். நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் சாத்தியமில்லை.

உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே பலருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிரம் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மாதவனுக்கு மத்திய அரசு கொடுத்த புதிய பதவி

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

madhavan appointed as FTII head

 

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் எனப் பல்வேறு மொழிகளில் பயணித்துள்ளார் நடிகர் மாதவன். கடந்த ஆண்டு இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற தலைப்பில் இயக்கியதோடு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். 

 

இப்படம் கடந்த வருடம் பிரான்சில் நடந்த உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு அளித்தனர். மேலும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் வெகுவாகப் பாராட்டினர்.  

 

இதையடுத்து சமீபத்தில் 69வது தேசியத் திரைப்பட விருது அறிவிப்பில் சிறந்த படம் என்ற பிரிவில் 'ராக்கெட்ரி' படத்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) தலைவராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவரது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.