இஸ்ரோவில் பணியாற்றிய வான்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்ற படத்தை நடிகர் மாதவன் இயக்கியுள்ளார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன் மாதவன் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “பார்த்தாலே பரவசம்’ படத்தின் சிமி கேரக்டர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ இந்திரா கேரக்டரை அடுத்து ’ராக்கெட்ரி’ படத்தின் மிஸஸ் நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்ததுவரை உங்களிடம் பெரிய மாற்றங்கள் எதுவுமில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் உங்களுடன் நடித்தது அருமையாக இருந்தது. நீங்கள் சிறந்தவர் மேடி” என்று குறிப்பிட்டுள்ளார்.