Skip to main content

“இதற்கெல்லாம் காரணம் நான் கிடையாது” - பழைய ஸ்டைலுக்கு திரும்பிய சிம்பு

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

simbu surprise video for fans regards pathu thala movie release

 

கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் டீசர், ட்ரைலர், இசை என அனைத்தும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் நாளை (30.03.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் காட்சி காலை 8 மணி முதல் தொடங்குகிறது. சிறப்பு காட்சிகள் எதுவும் திரையிடப்படவில்லை. படத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில், "பத்து தல படத்துக்கு நல்ல ஒரு எதிர்பார்ப்பு இருக்கு. பெரிய ஓப்பனிங் இருக்கு என்று சொல்றாங்க. இதற்கெல்லாம் காரணம் நான் கிடையாது. மேலும் என்னுடைய முந்தைய படம் ஹிட்டானது காரணம் கிடையாது. நீங்க கொடுத்த ஆதரவு தான் முழு காரணம். அதை என்றும் நான் மறக்கமாட்டேன். அதற்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் பத்தாது. எனக்கு நன்றி சொல்ல தெரியவில்லை. படத்துக்கு உங்க ஆதரவு கண்டிப்பா தேவை. நீங்க இல்லாமல் நான் இல்லை" எனப் பேசியுள்ளார். மேலும் அவருக்கே உரித்தான ஸ்டைலில் விரல்களை ஆட்டி முத்தம் கொடுத்தார். 

 

ஆரம்ப காலகட்டத்தில் 'சொன்னால்தான் காதலா', 'குத்து' எனத் தொடங்கி 'வல்லவன்' வரை பல படங்களின் ஓப்பனிங் சாங்கில் விரல்களை ஸ்டைலாக ஆட்டி வித்தை காட்டுவார். பின்பு அந்த ஸ்டைல் பெரிதளவு அவர் படங்களில் இடம்பெறவில்லை. சிம்புவின் சமீபத்திய ஹிட் படங்களான மாநாடு, மற்றும் வெந்து தணிந்தது காடு படங்களிலும் அது மிஸ்ஸாகி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் அந்த ஸ்டைலில் தற்போது சிம்பு பேசியிருக்கும் நிலையில் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சிம்பு!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Simbu joins hands with 2018 movie director!

சிம்பு தற்போது கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, ஐதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு முன்பாக கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். அப்படம் சிம்புவின் 48வது படமாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. 

தக் லைஃப் படத்திற்கு பிறகு, தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு தனது அடுத்த படத்தை மலையாள இயக்குநருடன் கைகோர்க்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, டோவினோ தாமஸ் நடிப்பில் ‘2018’ படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் சிம்பு இணையவுள்ளார் தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு மலையாள சினிமாவிலேயே அதிகமாக வசூல் சாதனை செய்த படமான  2018 படம் மக்களிடையே பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஜூன் ஆண்டனி ஜோசப், சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. 180 கோடி பொருட் செலவில் எடுக்கப்படும் இப்படத்தை ஏஜிஎஸ் புரொடக்‌ஷன் நிறுவனம் அல்லது தில் ராஜு தயாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது. 

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன், மேலும் ஒரு பெரிய நடிகர் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

சிம்பு படத்தில் இணையும் பாலிவுட் நடிகைகள் 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
janhvi kapoor and kiara advani to act in str 48

சிம்பு தற்போது கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு முன்பாக கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். அப்படம் சிம்புவின் 48வது படமாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. 

இப்படத்திற்காக சிம்பு வெளிநாட்டில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டது. வரலாற்று பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த மாஸ் படமாக இப்படம் உருவாவதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே கடந்த சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து போஸ்டரை வெளியிட்டது. அதில் சிம்பு இரண்டு கெட்டப்பில் தோன்றியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

janhvi kapoor and kiara advani to act in str 48

இப்படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பின்பு கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியின. இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவலாக பாலிவுட் நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி இருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரு நடிகைகளுக்குமே இந்தப் படம் கோலிவுட்டின் அறிமுகம படமாக இருக்கும் எனத் தெரிகிறது.