Skip to main content

நடிக்க மறுத்த சிம்பு; குவியும் பாராட்டுகள்

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

Simbu refused act liquor advertisement

 

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் ’பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

ad

 

இந்நிலையில் நடிகர் சிம்பு மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பன்னாட்டு மது நிறுவனம் ஒன்று தங்களது விளம்பரத்தில் நடிக்க சிம்புவை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் அதை சிம்பு திட்டவட்டமாக மறுத்துள்ளாராம். தன்னை பின்பற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் இருப்பதால் அவர்களின் நலன் கருதி சிம்பு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பலரும் நடிகர் சிம்புவை பாராட்டி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

தலைக்கேறிய போதை; ‘குடி’மகன்களின் அட்ராசிட்டி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 drunken youths hanged a tin plate on the transformer

மது போதை தலைக்கேறியதும் என்ன செய்கிறோம் என்பதை உணர்வதில்லை குடிமகன்கள். இதனாலேயே பல விபத்துகளும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படுவதுடன் பல நேரங்களில் உயிர்ப்பலிகளும் நடந்துவிடுகிறது. அப்படி ஒரு ஆபத்தான வேலையை தான் குடிமகன்கள் செய்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் வேம்பங்குடி கிழக்கு. இந்த கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.2.73 லட்சத்தில் 'அயோத்திதாஸ் பண்டிதர் மேம்பாட்டுத் திட்டம் 2023-2024' திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு பணிகள் பற்றிய விபரங்களை தகரப் பலகையில் எழுதி சாலை ஓரம் வைத்துள்ளனர்.

நேற்று இரவு அந்தப் பகுதியில் மது அருந்திய சிலர் மது போதை தலைக்கேறியதும் சாலை ஓரம் நடப்பட்டிருந்த சாலைப் பணிகள் பற்றிய விபரங்களை தகரப் பலகையை அடியோடு பிடுங்கி அருகில் உள்ள மின்மாற்றியின் மீது தொங்கவிட்டுச் சென்று விட்டனர். தகரப் பலகையை தொங்கவிட்ட போது சில அங்குலம் பக்கவாட்டிலோ, மேலேயோ தூக்கி இருந்தால் மின்கம்பியில் உரசி மின்விபத்து ஏற்பட்டு தகரப் பலகையை தூக்கிப் போட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

மது போதையில் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தான் சில நேரங்களில் உயிர்ப்பலிகள் வரை கொண்டு சென்று விடுகிறது என்று கூறும் பொதுமக்கள், மேலும் சாலைகள், விளைநிலங்கள், பொது இடங்களில் அமர்ந்து மதுஅருந்தும் மதுப்பிரியர்கள் மதுக் குடித்து முடித்ததும் போதையின் உச்சத்தில் காலிப் பாட்டில்களை உடைத்துப் போடுவதால் பலர் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றனர்.