Corona Kumar

Advertisment

‘ரௌத்திரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோகுல். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. விஜய் சேதுபதி, நந்திதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியையடுத்து, ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களை கோகுல் இயக்கினார். இவ்விரு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

இயக்குநர் கோகுல் அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அறிவிப்பு வெளியானது. இருப்பினும், இப்படத்தின் கதாநாயகன் யார் என்பது உள்ளிட்ட வேறு எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடாமல் இருந்தது. இந்த நிலையில், ‘கொரோனா குமார்’ படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போதுவெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார். இது நடிகர் சிம்புவின் 48வது திரைப்படமாகும்.

இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக 'சி.எஸ்.கே சிங்கங்களா...' என்ற பாடலையும் வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்பாடல், யூடியூப் தளத்தில் 7 லட்சம் பார்வைகளை நெருங்குகிறது.

Advertisment

இப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளதுரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.