Skip to main content

பான் இந்தியா படமாக உருவாகும் சில்க் ஸ்மிதா பயோ-பிக்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

silk smitha biopic starring chandrika ravi update

 

சினிமாவில் காலம் கடந்து நிற்பவர்கள் பட்டியலில் நடிகை சில்க் ஸ்மிதாவும் ஒருவர். இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதற்கு உதாரணமாக மார்க் ஆண்டனி படத்தில் அவர் பெயரில் வரும் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பு. அந்தளவிற்கு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட அவர், இளம் வயதிலேயே மறைந்தார். இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் 63வது பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய பதிவுகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், அவரது வாழ்க்கை கதையைத் தழுவி ஒரு படம் உருவாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிகை சந்திரிகா ரவி நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். 

 

‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை ஜெயராம் என்பவர் இயக்க எஸ்.பி. விஜய் என்பவர் தயாரிக்கிறார்.  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையைத் தழுவி இந்தியில் ‘தி டர்டி பிக்சர்’ என்ற தலைப்பில், கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாஜ்பாய் பயோ பிக்கின் டீசர் வெளியானது

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
vajpayee biopic teaser released

இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன. 

அந்த வரிசையில் பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் வாஜ்பாய் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி நடித்துள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியானது.  

மேலும், படத்தை இந்த ஆண்டு வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இப்படம் 2024 ஜனவரி 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ‘மெயின் அதல் ஹூன்’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

5 முறை எம்.எல்.ஏவாக இருந்த அரசியல் தலைவரின் பயோ-பிக்கில் சமுத்திரக்கனி

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
samuthirakani in five time Yellandu MLA Gummadi Narsaiah bio pic

நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, கடைசியாக தெலுங்கில் பவன் கல்யானை வைத்து 'ப்ரோ' படத்தை இயக்கியிருந்தார். 'வினோதய சித்தம்' படத்தின் ரீமேக்கான இப்படம் கடந்த ஜூலை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தமிழில் 'திரு.மாணிக்கம்' என்ற தலைப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் ஹரியின் ரத்னம், ஷங்கரின் இந்தியன் 2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். 

இந்த நிலையில் அரசியல் பயோ-பிக் கதையில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் எல்லண்டு (Yellandu) தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நின்று 5 முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பதிவு செய்யப்படாத சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புதிய ஜனநாயகம் கட்சியைச் சேர்ந்தவர். அப்பகுதி மக்கள் இவரை, ‘மக்கள் மனிதன்’ என அழைத்து வருகின்றனர். 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், சைக்கிளிலேயே பயணிக்கிறார். மேலும் சொந்த வீடு இல்லாமல் வாழ்ந்து வருவதாகப் பேசப்படுகிறது. 

கும்மாடி நர்சய்யா என்ற அவரது பெயரின் தலைப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பரமேஷ்வர் ஹிவ்ராலே இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில்தான் கும்மாடி நர்சய்யா கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.