shruthi hassan post makes fans shock

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும், நடிகர் பாலமுரளி கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'வால்டேர் வீரய்யா' எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

Advertisment

இதனிடையே ஹாலிவுட்டில் பிரபல நிறுவனமான டிசி தயாரிக்கும் 'தி சான்ட்மேன்: ஆக்ட் III' ஆடியோ நாடகத்திலும் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாலிவுட்டிலும் நடிகையாக அறிமுகமாகிறார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கும் 'தி ஐ' (The Eye) படத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வரும் ஸ்ருதிஹாசன், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்போதும் ஸ்ருதிஹாசன் புகைப்படங்களை ரசிக்கும் ரசிகர்கள் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளனர்.

அந்தப் புகைப்படத்தில் முகம் வீங்கியபடியும், மேக்கப் இல்லாமலும் ஸ்ருதிஹாசன் உள்ளார். மேலும், அந்தப் பதிவில், "சரியான செல்ஃபிக்கள் மற்றும் பதிவுகள் நிறைந்த இந்த உலகில் பதிவிடுவதற்கு தேர்வு செய்யாத புகைப்படங்கள் இவை. மோசமான தலைமுடி, காய்ச்சல் மற்றும் சைனஸ் காரணமாக முகம் வீங்கிய நாள், மாதவிடாய் நாள் மற்றும் பல… இதையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கண்டு ரசிகர்கள் ஷாக்கானாலும், ஒரு பிரபலமாக இருக்கும் ஸ்ருதிஹாசன் இது போன்று புகைப்படங்களை வெளியிடுவதற்கு தைரியம் வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.