Published on 04/12/2020 | Edited on 04/12/2020

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். காதல் முறிவால் அவதிப்பட்டு வந்த ஸ்ருதி, அதன்பிறகு சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடித்து 2017ஆம் ஆண்டுதான் படம் வெளியானது.
தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் லாபம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவருடைய பேஸனாக இருக்கும் இசை துறையிலும் தனது நண்பர்களுடன் கவனம் செலுத்தி வருகிறார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அண்மையில் பிகினி உடையில் புகைப்படம் பதிவிட்டது வைரலானது. மேலும் அந்த பதிவில் கிண்டலாக, “உங்கள் லுங்கியைத் திருடியதற்கு மன்னியுங்கள் தயாரிப்பாளர் ரேயன் ஸ்டெபன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ரேயன், நீயே வைத்துக்கொள் ஸ்ருதி என பதிவிட்டுள்ளார்.