The shooting of 'Love Link' started with Pooja

எம்ஆர் பிக்சர்ஸ் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில் ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

Advertisment

நடிகர் அஜித்குமாரின் ’வலிமை’, அதர்வா முரளியின் ’100’ மற்றும் பல படங்களில் ராஜ் அய்யப்பா நடித்திருக்கிறார். இவர், திரைப்படங்களில் மட்டுமல்லாது ஓடிடி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘உப்பு புளி காரம்’ என்ற ஓடிடி தொடரில் இவரது கதாபாத்திரம் பிரபலமானது. ‘லவ் இங்க்’ படத்தில் நடிகை டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். டெல்னா, இதற்கு முன்பு டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியுள்ளார். இதற்கு முன்பு, சில படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த இவர் சில அரசியல் பாடல்களை இயக்கியுள்ளார்.

Advertisment

இப்படம் குறித்து இயக்குநர் மேகராஜ் தாஸ் கூறும்போது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் மகேந்திரன் ஆதிகேசவன் சாருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்த பிறகு மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான நடிப்பு அதே நேரத்தில், பக்கத்து வீட்டுப் பையன் தோற்றத்தில் மக்களை ஈர்க்கும் வசீகரம் கொண்ட ஒரு நடிகரைத் தேடினேன். ‘வலிமை’ படத்தில் ராஜ் அய்யப்பாவின் நடிப்பைப் பார்த்தபோது, இந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என்று உணர்ந்தேன்.

டெல்னா டேவிஸ் தனது திறமையான நடிப்பு மற்றும் அழகால் பல ரசிகர்களைப் பெற்றவர். யோகி பாபு, திலீபன், விடிவி கணேஷ், முனிஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கே.பி.ஒய்.வினோத், டி.எஸ்.ஜி ( ‘மார்க் ஆண்டனி’ வில்லன், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்), மௌரிஷ் தாஸ், ப்ரீதா, வினோத் முன்னா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் உள்ளனர். அர்ஜூனா ஏ.எஸ் (ஒளிப்பதிவு), விஷ்ணு விஜய் (இசை), ராமு தங்கராஜ் (கலை இயக்குநர்), பி. கிருஷ்ணா சுதர்சன் (எடிட்டர்), மற்றும் சுரேஷ் சந்திரா (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்” என்றார்.

Advertisment