
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது என்று படப்பிடிப்பு தளத்திலிருந்து கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்துள்ளது.