shilpa shetty ed fraud case update

2017ஆம் ஆண்டு பிட் காயின் மூலம் 6,600 கோடி மோசடி செய்ததாக வேரியபிள் டெக் நிறுவனம் மீது டெல்லி போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிறுவனத்தை அஜய் பரத்வாஜ், விவேக் பரத்வாஜ், சிம்பி பரத்வாஜ், மகேந்தர் பரத்வாஜ் மற்றும் மறைந்த அமித் பரத்வாஜ் ஆகியோர் நடத்தி வந்த நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவுசெயப்பட்டது. இதையடுத்து இந்த விவாகாரத்தில் அமலாக்கத்துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisment

அந்த விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு இந்த மோசயில் தொடர்பு இருப்பதற்கான சில ஆதாரங்கள் கிடைத்தன. மறைந்த அமித் பரத்வாஜிடமிருந்து, ரூ.150 கோடிக்கும் மேல் ராஜ் குந்த்ரா பெற்றதாக தெரிய வந்தது. அதனடிப்படையில் ராஜ் குந்த்ராவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

Advertisment

shilpa shetty ed fraud case update

இந்த நிலையில் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான ரூ. 97.79 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஒரு பங்களா, ராஜ் குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள், ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜூஹுவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் ஆகியோர் இன்னும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.