![dgxdbdb](http://image.nakkheeran.in/cdn/farfuture/GORCz43M0ifTcISiB8mafs8LmD4If9eHB_wyEOcgCtk/1620442593/sites/default/files/inline-images/Shanthanu-Bhagyaraj-1-1280x720.jpg)
இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.
இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று (07.05.02021) பதிவிட்டார். அதில், தன் பெற்றோர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து சாந்தனு தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"Dear wellwishers
அப்பா compulsory ஓய்வுல இருக்கணும்னு Dr’s அட்வைஸ், அதான் phone’la யார்கிட்டயும் பேச முடியல.
நான் பேசலேன்னு கால் பண்ணவங்க feel பண்ணுவாங்கன்னு அப்பா ரொம்ப feel பண்ணாரு. Sorry, புரிஞ்சுக்குவீங்கன்னு தெரியும். ரெண்டு பேரும் நலமா இருக்காங்க. We will return ur calls soon" என பதிவிட்டுள்ளார்.