/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1079.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்குகிறார். தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு அஜித்தின் படத்தின் தலைப்பை வைக்க ஷங்கர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி கடந்த 2001 ஆம் ஆண்டு சரவணன் சுப்பையா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த சிட்டிசன் படத்தின் தலைப்பை ஆர்.சி 15 படத்திற்கு வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் ஆக்சன் படம் என்பதால் இந்த தலைப்பை வைத்தால் பொருத்தமாக இருக்கும் எனப் படக்குழு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)