shankar game changer song leak issue

இயக்குநர் ஷங்கர் கமலை வைத்து 'இந்தியன் 2' மற்றும் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என இரண்டு படங்களையும் இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Advertisment

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகளுக்கு ரூ. 90 கோடி செலவு செய்துள்ளதாக முன்பு ஒரு தகவல் வெளியானது.

Advertisment

இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகப் பேசப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம், படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. அது வைரலாகப் பரவ அதிர்ச்சியடைந்த படக்குழு, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது. புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் பாடலை லீக் செய்த நபர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சைபர் போலீசார் தற்போது இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' தீபாவளி-யன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.