Skip to main content

இந்தியன் 2 தாமதமாக காரணம் யார்? - ஷங்கர் விளக்கம்!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021
ggkhki

 

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைப்பட்டது. தற்போது அரசியல் பணிகளில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் ஷங்கரும் அடுத்தாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தையும், ரன்வீர் சிங்குடன் ‘அந்நியன்’ ஹிந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

 

இதனால், 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்....

 

முதலில் இந்த படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்தார். பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்தது. கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டு 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பைத் துவங்க முடிவு செய்தேன். படத்தை தயாரிக்க ரூ.270 கோடி செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதைக் குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியது. அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பைத் துவங்குவதில் தேவையில்லாத தாமத்தை லைகா நிறுவனம் ஏற்படுத்தியது. தில்ராஜு மட்டும் படத்தை தயாரித்திருந்தால் இப்படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும். மேலும் அரங்குகள் அமைத்துத் தருவதில் தாமதம். நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானது.

 

மேலும் நடிகர் கமல்ஹாசனுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும், படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானது. எனவே நஷ்டத்துக்கும், தாமதத்திற்கும் நான் பொறுப்பல்ல.  வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்கத் தயாராக இருப்பதாக கூறியும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலம் லைகா நிறுவனம் படப்பிடிப்பை தாமாதப்படுத்தியதால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுக்கு சேர வேண்டிய ஊதியத் தொகை கிடைக்காததால், தற்போது வேறு படங்களில் பணியாற்ற சென்று விட்டனர். எனவே, தனக்கு எதிராக லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை வரும் ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.