/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_24.jpg)
‘மகாபாரதம்’, ‘சக்திமான்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் முகேஷ் கண்ணா. இதில், ‘சக்திமான்’ தொடரில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், இந்தியா முழுமைக்கும் அவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்தது.
இந்த நிலையில், முகேஷ் கண்ணாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் பரவின. சமூக வலைதளங்களில் அவர் இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவின. இதையடுத்து, நடிகர் முகேஷ் கண்ணா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், தனக்கு கரோனா தொற்று ஏற்படவில்லையென்றும், தான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு நிறைய அழைப்புகள் வந்ததாகத் தெரிவித்துள்ள முகேஷ் கண்ணா, தன்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)