Skip to main content

உதட்டை கிழித்த கிரிக்கெட் பால்... 13 தையல் போட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல நடிகர்...

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களில் ஒன்று ஜெர்ஸி. இப்படத்தில் ஹீரோவாக நானியும், ஹீரோயினாக ஷரத்தா ஸ்ரீநாத்தும் நடித்தனர். கிரிக்கெட்தான் வாழ்க்கை என்று நினைத்துகொண்டு வாழும் இளைஞன் ஒருவரின் வாழ்க்கை திருமணம் நடைபெற்றவுடன் அந்த கிரிக்கெட்டையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகிறார். மீண்டும் தன்னுடைய மகனின் ஆசைக்காக கிரிக்கெட்டில் கலந்துகொள்கிறார். அவர் சாதித்தாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை. 
 

shahid kapoor

 

 

இந்த வெற்றி படத்தை பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பாலிவுட்டில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக்காவது உறுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது பாலிவுட்டில் படபிடிப்பும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஷாகித் கபூர் உடற்பயிற்சி மேற்கொண்டு, கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொண்டார். இந்த படத்தின் ஷூட்டிங் மோகாலியில் நடைபெற்றபோது கிரிக்கெட் பந்து ஷாகித்தின் உதட்டை கிழித்து, 13 தையல் உதட்டில் போட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த வருடம் ஷாகித் நடிப்பில் கபீர் சிங் படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. இந்த படம் 2017ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இருபது ஓவர் உலகக்கோப்பை: இந்திய அணியின் 'பில்லியன் சியர்ஸ் ஜெர்சி' அறிமுகம்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

team india jersey for t20 wc 2021

 

2021ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக்கோப்பை, வரும் 17ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. முதலில் இந்தியாவில் நடைபெறவிருந்த போட்டி, கரோனா பரவல் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நாட்டில் நடைபெறவுள்ளது.

 

இப்போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. விராட், ரோகித், பும்ரா, கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

 

மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம், இந்தப் புதிய ஜெர்சியை 'பில்லியன் சியர்ஸ் ஜெர்சி' (billion cheers jersey) என குறிப்பிட்டுள்ளதோடு, இந்தப் புதிய ஜெர்சியின் வடிவம் பில்லியன் கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்தால் உந்தப்பட்டது எனவும் கூறியுள்ளது.

 

 

Next Story

வெளியானது ஹிந்தி ‘அர்ஜூன் ரெட்டி’ ட்ரைலர்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான  ‘அர்ஜூன் ரெட்டி’ படம் அனைத்து மொழி பேசும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இப்படத்தை ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட இரு மொழிகளிலும் ரீமேக் செய்ய தொடங்கினர். 
 

kabir singh

 

 

ஹிந்தி மொழியில் நடிகர் ஷாகித் கபூரை வைத்து, தெலுங்கு அர்ஜுன் ரெட்டியை ரீமேக் செய்த சந்தீப் வங்கா ரெட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனை அடுத்து கடந்த மாதம் இப்படத்திற்கான டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இன்று இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஜூன் 21ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.