Skip to main content

5 நாளில் ரூ.500 கோடி - பதான் 2க்கு ரெடியான ஷாருக்கான்

 

Shah Rukh Khan is ready to do Pathaan 2

 

ஷாருக்கானின் 'பதான்' படம் ஒரு வழியாக காவி சர்ச்சையில் இருந்து கடந்து வந்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் நான்கு நாட்களில் ரூ.429 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

 

முன்னதாக படம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த பல தலைவர்கள் படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திரைப்படங்கள் குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாக ஒரு தகவல் வெளியானது. பின்பு படத்தை எதிர்த்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், “பதான் படத்தில் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியில் உள்ளோம். இதனால், போராட்டம் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்”  எனத் தெரிவித்திருந்தனர். 

 

இந்நிலையில், 'பதான்' படம் ஐந்து நாட்களில் ரூ.543 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளனர். இதில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

அப்போது பதான் இரண்டாம் பாகம் குறித்து ஷாருக்கான் பேசினார். அவர் பேசுகையில், "இந்த வெற்றி எங்களுக்கு; என் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த மகிழ்ச்சியை நாங்கள் சிறிதுகாலமாக மட்டும் அனுபவிக்க விரும்பவில்லை. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் பதான் 2 உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் நான் அதைச் செய்வேன். அதைச் செய்வது எனது மரியாதையாக இருக்கும்” என்றார்.