Selvaraghavan play politician role vijay satrring Beast movie

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில்இயக்குநர்அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'சாணிக்காயிதம்' படத்தில் நடித்துமுடித்துள்ள செல்வராகவன் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளதார்.

Advertisment

இந்நிலையில் செல்வராகவன் கதாபாத்திரம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதன்படி, இயக்குநர் செல்வராகவன் 'பீஸ்ட்' படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சீரியஸ்படங்களை இயக்கி வந்த செல்வராகவன் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துரசிகர்களை சர்ப்ரைஸ் செய்யவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.