Seera Seera

Advertisment

இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படம் கிராமிய வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள சமூக நையாண்டி வகை திரைப்படமாகும். மனிதநேய உணர்வுகளையும் நகைச்சுவையையும் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகேசன், ரம்யா பாண்டியன், வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் 24ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள 'சீரா... சீரா...' என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பாடலில் மாட்டிற்கும் அதனை வளர்ப்போரின் குடும்பத்திற்கும் இடையேயான உறவை பிரதிபலிக்கும் வகையிலான வரிகளும், 'மாடு இல்லாட்டி சுழலாதே பூமி...' என மாடுகளின் முக்கியத்துவத்தைக் கூறும் வரிகளும் இடம்பெற்றுள்ளன. யுகபாரதி வரிகள் எழுத, கிரிஷ், ராஜேஸ்வரி, மகாலிங்கம் இணைந்து பாடியுள்ள இப்பாடலை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.