Skip to main content

''‘தர்மதுரை 2'க்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!" - சீனு ராமசாமி 

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

rhrhfdhdf

 

சென்ற 2016ஆம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது 'தர்மதுரை' படம். இப்படத்தில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் வெளியான ‘எந்தப் பக்கம்...’ பாடலுக்குத் தேசிய விருது கிடைத்தது. நடிகர் ஆர்.கே. சுரேஷ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளதாக தயாரிப்பாளர், நடிகர் ஆர்.கே. சுரேஷ் சமூகவலைதளத்தில் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் 'தர்மதுரை 2' பட அறிவிப்புக்கு விளக்கமளித்து இயக்குநர் சீனு ராமசாமி ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

hfhfdnd

 

"தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.
வாழ்த்துக்கள்.
ஆனால் 
அதை நான் இயக்குவதாக வரும் செய்திகள்
உண்மையல்ல.
ஆகவே அது சம்பந்தமான விசயத்தில் 
எனக்கு எவ்வித சம்பந்தம் 
இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

விரைவில் என் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

Next Story

நடிகர் அவதாரமெடுக்கும் இயக்குநர் சீனுராமசாமி; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Director Seenuramasamy, who plays the actor; first Look Poster Release

 

தமிழ் சினிமாவில் கூடல்நகர் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்கள் இயக்கியதன் மூலமாக அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தவர். இவருடைய இடம் பொருள் ஏவல், இடி முழக்கம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

 

இவரது இயக்கத்தில் வெளியான தர்மதுரை திரைப்படத்தில் நூலகராக ஒரு காட்சியில் மட்டும் இடம்பெறுவார். தற்போது புதுமுக இயக்குநர் விஜய் கார்த்திக் இயக்கும் "ஈகுவாலிட்டி” என்ற திரைப்படத்தில் முழுவதுமாக நடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய வலைதள பக்கத்தில் “குறை நிறைகளோடு என் படைப்புகளை ஆதரித்து அங்கீகரித்த தமிழ் சமூகம் எனை நடிகனாகவும் ஏற்று கொள்ளும் என்ற நம்பிக்கையில் நான் நடித்த திரைப்படத்தின் முதல் பார்வையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்” என்று போஸ்டரை வெளியிட்டுள்ளார்.