Skip to main content

"வாய் கிழிய பேசுவார், அவரும் இன்று விலை போகிவிட்டார்" - கம்யூனிச இயக்குநரை சாடிய ஷான் ரோல்டன்

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

Sean Roldan tweet about his friend and director

 

தமிழில் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஷான் ரோல்டன் தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி', 'ப.பாண்டி', 'மெஹந்தி சர்க்கஸ்' உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார். கடைசியாக ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய் பீம்' படத்தில் இசையமைத்திருந்தார். 

 

இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "என் நண்பர் இயக்குநர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர்மூச்சாய் கொண்டவர். எங்கள் பிணைப்பையும், கலை சார்ந்த கெமிஸ்ட்ரியையும் இந்த திரையுலகம் நன்கு அறியும். ஆனால், அவரும் இன்று வியாபார கோட்பாட்டுக்கு விலை போனது வருத்தத்தை அளிக்கிறது. சித்தாந்தங்களை இங்கு வாய் கிழிய பேசுவார்கள். ஆனால், நடைமுறையில் இவையெல்லாம் நம் தமிழ்நாட்டில் போணியாவதில்லை என்பதே நிதர்சனம். இனி, சித்தாந்தம் என்ற பெயரில் வாய் சவடால் விடுபவர்களை புறக்கணியுங்கள். மார்க்கெட் தான் நம் கடவுள்" என குறிப்பிட்டுள்ளார்.  

 

இவரது பதிவு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ராஜு முருகன் மற்றும் ஞானவேல் ஆகியோர் தொடர்ச்சியாக கம்யூனிச சித்தாந்தம் குறித்து பேசுபவர்களாக அறியப்படுகிறார்கள். இருவருடனும் ஷான் ரோல்டன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஃபேமிலி படம்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம் 

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
family padam shooting starts

யுகே கிரியேஷன் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும், படம் ‘ஃபேமிலி படம்’. இப்படத்தில் நாயகனாக டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிவீ இசையமைக்கிறார்.  
 
ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள், அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பூஜையுடன் துவங்கியது. 

முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

போன சம்மருக்கு மிஸ்ஸிங்; இந்த கோடையில் களமிறங்கும் ஜி.வி பிரகாஷ்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
gv prakash kalvan movie trailer released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இதனிடையே, 'கள்வன்' படத்தில் ஜி.வி பிரகாஷோடு, பாரதிராஜாவும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவானா கதாநாயகியாக நடிக்க தீனா, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாத்திங்களில் நடித்துள்ளனர். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. 

gv prakash kalvan movie trailer released

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கும் பிறகு தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஏப்ரல் 4அம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.