Skip to main content

குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட திரை பிரபலம் ; திரையுலகினர் அதிர்ச்சி

 

The screen celebrity whose body was recovered in the bathroom; The filmmakers were shocked

 

பிரதியுஷா கேரிமெல்லா, தெலுங்கு திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர். அமெரிக்காவில் பேஷன் டிசைனிங் முடித்த இவர் இந்தியாவில் சிறந்த 30 ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். இந்தி திரையுலகின் பிரபலங்கள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், பரினீதி சோப்ரா, ஹூமா குரேஸி, ரகுல் பிரீத் சிங், வித்யா பாலன் உள்ளிட்ட பலருக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 

 

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரதியுஷா (35) குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக மருத்துமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அவரது குளியலறையில் கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு பாட்டில் இருந்துள்ளது. அதனை பிரதியுஷா அதிகம் சுவாசித்துள்ளதால் இறந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

மேலும் பிரதியுஷா, ஒரு வாரத்திற்கு முன்பு அவரது இல்லத்தின் குளியலறையில் காற்றோட்டம் வெளியேறும் பகுதிகளை அடைப்பதற்காக ஒரு கார்பென்டரை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அதே குளியலறையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.