Published on 11/12/2021 | Edited on 11/12/2021
![sathish starring naai sekar movie song released](http://image.nakkheeran.in/cdn/farfuture/tTNIETw7UL3VmMzm-e1xjASX-oMSbCDLZm-YjZhyKAo/1639224615/sites/default/files/inline-images/sathish_2.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில், ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் உருவாகிவரும் ‘நாய் சேகர்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சதீஷிற்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் 21வது படமான ‘நாய் சேகர்’, முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
![ad](http://image.nakkheeran.in/cdn/farfuture/e_UvB2pOTKuS_Wz1UMh_CzICtp59ILFESv9GwXrhb_8/1639224651/sites/default/files/inline-images/ik-ad%20%281%29_46.jpg)
இந்நிலையில் 'நாய் சேகர்' படத்தின் 'எடக்கு முடக்கு' என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடியுள்ள இப்பாடல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.