Skip to main content

"ஆன்லைன் ரம்மி.. என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது" - நடிகர் சரத்குமார்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

sarathkumar talk online rummy

 

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. 

 

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர் ஒருவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர்  தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். ஆனால் நீங்கள் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்து வருகிர்கள் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த சரத்குமார், "குடி, சிகரெட் பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் இதெல்லாம் உங்களால் தடை செய்ய முடியுமா. அதே மாதிரி எதையெதை தடை செய்யணும்னு நான் முடிவு பண்ண முடியாது. அதை உச்சநீதிமன்றமும், அரசும் மட்டும் தான் பண்ண முடியும். அப்படி அரசாங்கம் தடை செய்த ஒன்றில் நான் நடிக்க மாட்டேன். ஆனால் அரசாங்கம் தடை செய்யாத ஒன்றில் நடித்தால் யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது. முதலில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுங்கள். 

 

அதே போல டாஸ்மாக் கடைகளால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அதை மூட வேண்டும் என்று சொல்லுங்கள், உங்களுக்கு  ஆதரவாக நான் போராட தயாராக இருக்கிறேன் . சினிமாவில் சிகரெட் பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு  என்று கீழேயே விழிப்புணர்வு வாசகம் வருகிறது. அதனால எல்லாரும் சிகரெட் பிடிக்கிறதா நிறுத்திட்டீங்களா என்ன, இல்லையே. குடிப்பழக்கத்தால் தினமும் இரவு நேரத்தில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. அப்போ அதை முழுமையாக ஒழித்து விட வேண்டியதுதானே. ஏன் பண்ண முடியல. இது ரொம்ப பெரிய விவாதம், இன்னொரு நாள் நல்லா விரிவாக பேசுவோம்" என பதிலளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

“வடிவேலு நிச்சயம் அழுதிருப்பார் அவரும் மனிதர் தானே” - சரத்குமார்

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
sarathkumar about vadivelu in vijayakanth Memorial mee

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மறைந்த விஜயகாந்தின் நினைவையொட்டி, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் கமல், சத்யராஜ், சரத்குமார் எனத் திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அனைவரும் விஜயகாந்த்தின் படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், “விஜயகாந்தின் சில விஷயங்களை நாம் கொண்டாட வேண்டும். அவருடைய குணம், பழகுகின்ற விதம், வள்ளல் பண்பு, இதுபோன்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். அவருடைய புலன் விசாரணை படத்தில் நான் வில்லனாக நடித்தேன். அப்போது ஒரு காட்சியில் எனக்கு அடிப்பட்டுவிட்டது. 3 நாள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்கள். ஆனால் உடனே படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன். என்னை பார்த்ததும் விஜயகாந்திற்கு அதிர்ச்சி. ஏன் இப்படி பண்றீங்க என என்னிடம் கடிந்து கொண்டார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு, ‘இந்த படத்தில் உங்களுக்கு தான் பெரிய பேரு. அதுக்கப்புறம் தான் மத்தவங்க’ என்றார். அப்படி சொன்ன பெருந்தன்மை வேறொரு எந்த கதாநாயகனுக்கும் இருக்காது. கேப்டன் பிரபாகரன் முடிந்தப்போ கூட மன்சூர் அலிகானுக்குத் தான் இந்த படத்தில் முதல் பேரு என்றார்.  

அவர் கோவம் உள்ளவர் என எல்லாருக்கும் தெரியும். கோவம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். அப்படிப்பட்ட குணம் படைத்தவர் தான் அவர். கோவத்தை உடனே மறந்துவிடுவார். இவன் இப்படி பேசிட்டான், இவன ஏதாவது பண்ணனும் என்று நினைத்ததே கிடையாது. வடிவேலு வரவில்லையே என என்னிடம் கேள்வி கேட்டபோது, வடிவேலு வீட்டில் உட்கார்ந்து விஜயகாந்தை நினைத்து அழுதிருக்கலாம். அவரும் மனிதர்தான். வர முடியலேயே, வந்தால் ஏதாவது திட்டுவாங்களோ என நினைத்திருக்கலாம். ஆனால் மறப்போம், மன்னிப்போம் என்ற குணம் படைத்த விஜயகாந்த் அவர்கள், இதையெல்லாம் பெரிதாக எடுத்திருக்க மாட்டார். வடிவேலு நிச்சயமா அழுதிருப்பார் என்றேன். 

தமிழ் சமுதாயத்தில் காலம் உள்ள வரை விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருப்பார். வள்ளல்களை நாடு மறப்பதில்லை. தமிழ் சமுதாயமும் மறப்பதில்லை. அதனால் அவர் விட்டுச் சென்ற சமுதாய பணிகளை நாம் செய்வோம்” என்றார்.