Skip to main content

“நிலையற்ற வாழ்வில் அவரது மறைவு பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது” - சரத்குமார் இரங்கல்

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
sarathkumar condolence message for director surya prakash passed away

ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடிப்பில் 1996ஆம் அண்டு வெளியான மாணிக்கம் படத்தை இயக்கியவர் சூர்யபிரகாஷ். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து சரத்குமாரை வைத்து மாயி மற்றும் திவான் என இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஜீவன் நடித்த அதிபர் மற்றும் தெலுங்கில் ராஜசேகர் நடித்த பாரதசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, வருசநாடு என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வந்தார். இந்த படம் வெளியாவதில் தாமதமாகி வருகிறது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் சூர்யபிரகாஷ் மறைந்துள்ளார். மாரடைப்பு காரணமாக மறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவுற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சரத்குமார், “எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்