Santhosh Narayanan is compose bgm for Amitabh Bachchan project k

தமிழில் டாப் ஹீரோக்களான ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு ஹீரோ படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். இப்போது தமிழில் பிரஷாந்த் நடிப்பில் உருவாகும் 'அந்தகன்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் 'ஜிகர்தண்டா 2' மற்றும் இரண்டு தெலுங்கு படத்திற்கு இசையமைக்கிறார். இதனிடையே அஜித்தின் 62வது படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளதாகச்சொல்லப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லை எனவும் திரை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

Advertisment

இந்த நிலையில் பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிக்கும் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் இசையமைக்கவுள்ளார். இதனை இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “ப்ராஜெக்ட் கே. படத்தில் பின்னணி இசை மிக்கி ஜே மேயர் இசையமைக்கவில்லை. அதற்கு பதில் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்கவுள்ளார். மேலும் பாலிவுட் பெண் இசைக் கலைஞர் ஒருவரையும் இணைத்துள்ளோம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்”என்றார்.

Advertisment

சந்தோஷ் நாராயணன் இசையில் தமிழைத்தாண்டி தெலுங்கில் 3 படம், மலையாளத்தில் 2 படம், கன்னடத்தில் 1 படம் மற்றும் இந்தியில் 1 படமும் வெளியாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து இவரது பின்னணிஇசையில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'ப்ராஜெக்ட் கே' படம் வெளியாகவுள்ளது. நாக் அஸ்வின் இயக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க, பெரும் பொருட்செலவில் அஸ்வின் தத் தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி (12.01.2024) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.